shadow

‘புலிக்கு போட்டியாக சரித்திர கதையில் நடிக்க அஜீத் முடிவா?

historyவிஜய் நடித்த ‘புலி’ படத்தின் டிரைலருக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என விஜய் ரசிகர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இணையதளங்களையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு பல புதிய சாதனைகளை ‘புலி’ டிரைலர் செய்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் பாகுபலியின் வெற்றி, புலி படத்தின் டிரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு ஆகியவை பல நடிகர்களை சரித்திரத்தின் பக்கம் பார்வையை திரும்ப வைத்துள்ளது என கூறப்படுகிறது.

குறிப்பாக அஜீத் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் தங்களுடைய அடுத்த படங்களுக்காக சரித்திரக் கதையை கேட்டு வருவதாகவும், கோலிவுட்டில் இதுவரை ஆட்டிப்படைத்து கொண்டிருந்த பேய்ப்படங்களின் டிரண்ட் முடிவுக்கு வந்து, இனிமேல் சரித்திர படங்களின் டிரண்ட் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இயக்குனர்களும் சாண்டில்யன், கல்கி போன்ற சரித்திர எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை தூசிதட்டி படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. புலியை பார்த்து சூடு போட்டு கொண்ட பூனை கதை போல் ஆகாமல் இருந்தால் சரி?

Leave a Reply