shadow

wifiசென்னை சென்ட்ரல், எக்மோர் உள்பட தமிழகத்தில் ஒருசில முக்கிய ரயில் நிலையங்களில் வை-பை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நேற்று முன் தினம் தாக்கல் செய்த ரயில்வெ பட்ஜெட்டில் ஏ-1’ மற்றும் ‘ஏ’ வகை ரயில் நிலையங்களில்  ‘வை-பை’ வசதி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், மதுரை, கோவை ஆகிய ஏ1 ரயில் நிலையங்களிலும்,  விழுப்புரம், திருச்சி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய ஏ வகை ரயில் நிலையங்களிலும் கூடிய விரைவில் ‘வை-பை’ வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுவரை ஷாப்பிங் மால், போன்ற பெரிய நிறுவனங்களில் மட்டுமே ‘வை-பை’ வசதி இருந்தது. இனிமேல் சாதாரண மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையங்களிலும் இந்த வசதி வரயிருப்பதால் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் பயன்பெறுவர். கேரளாவில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலும் ‘வை-பை’ வசதி செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 1.50 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த வசதி பெரிய உதவியாக இருக்கும்.

Leave a Reply