mallika sherawatமூத்த நடிகரான ஓம்புரியுடன் படுக்கையறை காட்சி உள்பட படு கவர்ச்சியாக மல்லிகா ஷெராவத் நடித்துள்ள படம் “தி டர்ட்டி பாலிடிக்ஸ்”. முதலில் இந்த படத்தில் நடிக்க இயக்குனர் பொகாடியா, வித்யா பாலனைத்தான் அணுகினாராம். ஆனால் படத்தின் கதையமைப்பு “தி டர்ட்டி பிக்சர்ஸ்” போலவே இருந்ததால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மல்லிகாவிடம் இந்த படத்தின் கதையை சொன்னதும் தயக்கமேதும் இன்றி உடனே ஒப்புக்கொண்டாராம்.

மூத்த நடிகருடன் படுக்கையறை காட்சி, மது குடிக்கும் காட்சி போன்ற காட்சிகளில் எவ்வித தயக்கமும் இன்றி போல்டாக மல்லிகா நடித்திருப்பதாக மல்லிகாவுக்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த படம் குறித்து இயக்குனர் பொகாடியா கூறும்போது, ‘‘‘இது எல்லா படங்களைப்போல் சாதாரணமான கவர்ச்சிப் படம் இல்லை. இந்தக் கிளு கிளுப்பு மூலம் கருத்தும் சொல்லியிருக்கிறோம்!’’ என்று ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ பற்றி இயக்குநர் பொக்காடியா, பாலிவுட் தளத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில்,  சில வயதான வெள்ளை வெளேர் அரசியல்வாதிகளின் கறுப்பு ஏரியாவை அம்பலப்படுத்தும் அனோக்கிதேவி என்ற ஒரு ஏழைப் பெண் கேரக்டரில், வெளுத்து வாங்கியிருக்கிறாராம் மல்லிகா.

இந்த படம் பிப்ரவரி 15ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *