shadow

‘வேதாளம்’ டிரைலர் ரிலீஸ் ஆவதை தடுத்த அஜீத்? பரபரப்பு தகவல்
vedhalam
அஜீத் நடித்துள்ள ‘வேதாளம்’ திரைப்படம் இன்னும் மூன்றே நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்னும் ரிலீசாகவில்லை என்பது அஜீத் ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது. இதோ அதோ என்று டிரைலர் குறித்து போக்கு காட்டிய படக்குழுவினர் கடைசியில் ‘வேதாளம்’ படத்தின் டிரைலரை வெளியிடமால் நேரடியாக படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டிரைலர் தயாரானதும் அஜீத் இந்த படத்தின் டிரைலரை பார்த்ததாகவும், இந்த டிரைலரிலேயே பல சஸ்பென்ஸ்கள் வெளியேறும் வாய்ப்பு இருப்பதாகவும், எனவே டிரைலரை வெளியிட வேண்டாம் என அஜீத் ஆலோசனை கூறியதாகவும் இதனால் டிரைலரை படக்குழுவினர் நிறுத்தி வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

ஆனால் இந்த படத்தின் ஃபைனல் காப்பியை தயார் செய்யும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக இருந்ததால், டிரைலர் பணிகளை அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், டிரைலர் தயாராகி வருவதற்கு முன்பு படமே சென்சார் ஆகிவிட்டதால் டிரைலர் தயாரிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இன்னொரு தரப்பு கூறுகிறது.

எது எப்படியோ டிரைலரே வெளியாகாமல் சமீபத்தில் எந்த தமிழ்ப்படமும் ரிலீஸ் ஆனதில்லை. பல வருடங்கள் கழித்து முதன்முதலாக டிரைலர் வெளியிடாமல் வரும் திரைப்படம் ‘வேதாளம்’ என்ற பெருமையை இந்த படம் பெறுகிறது.

shadow

Leave a Reply