தமிழ்ப்படங்களில் டாப்சி நடிக்க மறுப்பது ஏன்?

ஆடுகளம், அமர்க்களம், முனி 3 ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை டாப்சி தற்போது முழுக்க முழுக்க பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஒருசில தமிழ்ப்படங்கள் வாய்ப்பு வந்தபோதும் அவர் அதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது பட்வா என்ற இந்திப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் டாப்சி அடுத்து அமிதாப்புடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் சுஜாய் கோஷ் இயக்கும் இந்த படம் திரில்லராக உருவாகிறது.

டாப்சிக்கு வரிசையாக இந்தி வாய்ப்புகள் குவிவதால் தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் மறுத்துவிடுகிறார். முக்கியமாக டாப்சியை ஆரம்ப காலங்களில் வளர்த்த தமிழிலும் நடிக்க மறுக்கிறார்.

இந்தியில் மட்டும் டாப்சியின் கையில் 4 படங்கள் இருக்கின்றன. சமீபத்தில் தமிழ் இயக்குனர் ஒருவர் அணுகியதற்கு கதை கேட்கவே மறுத்துவிட்டாராம் டாப்சி.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *