shadow

விஜய் படப்பிடிப்புக்கு அனுமதி ஏன்? தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்

மார்ச் 1 முதல் புதிய படங்கள் வெளியீடு இல்லை, மார்ச் 16 முதல் படப்பிடிப்புகள் இல்லை என ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62; படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளதால் திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கையின் மூலம் விளக்கமளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

விஜய் 62வது படத்தில் ஹைதராபாத்தில் இருந்து 2 ஸ்டண்ட் மாஸ்டர்கள் வந்துள்ளார்களாம். இருவருக்கும் அடுத்தடுத்து பட வேலைகள் இருப்பதால் அவர்களுக்காக படப்பிடிப்பு நடக்கிறது. நாடோடிகள் படப்பிடிப்பு வெளியூரில் எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் அவர்கள் எடுக்கிறார்களாம். அதேபோல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வர பாதியில் உடனே நிறுத்த முடியாத காரணத்தால் அவர்களது படப்பிடிப்பு நடக்கிறது” என்று கூறியுள்ளது. இவர்கள் அனைவருமே முறையான அனுமதியை தயாரிப்பாளர் சங்கத்திடம் பெற்றபின்னரே படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

why special permission to vijay 62 says producers council

Leave a Reply