விஜய்யின் இமேஜை கெடுக்க சதியா? திடுக்கிடும் தகவல்
vijay
விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு பல ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்துள்ளன. மேலும் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த படத்தை பயங்கரமாக கேலி செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த படத்தின் வசூல் மோசமில்லை என்றும் வெளியான ஐந்து நாட்களில் இதுவரை ரூ.42 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தீபாவளி வரை வேறு பெரிய படங்களின் ரிலீஸ் இல்லாததால், ‘புலி’ இன்னும் நல்ல வசூலை கொடுக்கும் என தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் ஒழுங்காக வரி கட்டவில்லை என்றும் சமீபத்தில் பரபரப்பான செய்தி வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விஜய், தான் ஒவ்வொரு வருடமும் தனது வருமானத்துக்கு உரிய வரியை கட்டி வருவதாகவும், ஆனால் ஊடகங்களில் பொய்யான தகவல்கள் வெளிவந்து தனது மனதை புண்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

விஜய்க்கு எதிராக வருமான வரி குறித்தும், ‘புலி’ படம் குறித்தும் வேண்டுமேன்றே சிலர் தவறான தகவல்களை இணையதளங்களில் பதிவு செய்து அவருடைய இமேஜை கெடுக்க சதி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் பல தடைகளை சந்தித்து வெற்றி நடை போட்டு வரும் இந்த பிரச்சனைகளையும் எளிதாக சமாளிப்பார் என கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *