shadow

ரகசிய திருமணம் ஏன்? ஸ்ரேயா தரப்பினர் விளக்கம்

ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’, தனுஷ் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம், விக்ரம் நடித்த கந்தசாமி உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா சமீபத்தில் தனது காதலரை மும்பையில் உள்ள தனது வீட்டில் ரகசிய திருமணம் செய்ததாக செய்திகள் வெளிவந்தது

இந்த ரகசிய திருமணம் குறித்து ஸ்ரேயாவின் தரப்பினர் கூறியபோது, ‘ஸ்ரேயாவின் தாயாருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் அதனால் பிரச்சினை ஏற்பட்டு திருமணம் நின்றுவிடக்கூடாது என்பதற்காகவே, முன்னதாகவே ஸ்ரேயா- ஆண்ட்ரே கோசிவ் ரகசிய திருமணம் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஸ்ரேயா- ஆண்ட்ரே கோசிவ் திருமணம் அனைவர் முன்னிலையிலும் மார்ச் மாதம் 16,17,18 ஆகிய 3 நாட்கள் ராஜஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ரகசிய திருமணம் மார்ச் 12ஆம் தேதியே நடைபெற்றது.

Leave a Reply