shadow

rajaகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓய்வு எடுக்க ராகுல்காந்தி வெளிநாட்டுக்கு திடீரென பயணமானார். அவர் எந்த நாட்டுக்கு சென்றார், எதற்கு சென்றார் என்பது காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களுக்கே தெரியாத நிலையில் ராகுல்காந்தி 50 நாட்கள் தாய்லாந்து நாட்டில் உல்லாசமாக இருந்ததாக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா பேசியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திரமோடி அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் திருச்சி சமயபுரம் கொள்ளிடம் டோல்கேட்டில் நேற்றிரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு பேசுகையில், “மோடி வெளிநாடு போகிறாரே அவர் எங்கு தூங்குகிறார் என்பது  உள்ளிட்டவை வெளிப்படையாக சொல்கிறோம். ஆனால் ராகுல்காந்தி 50 நாள் வெளிநாடு போனாரே, எந்த நாட்டுக்கு போனார்ன்னு தெரியுமா, தாய்லாந்துக்கு. அந்தநாடு எதுக்கு பேமஸ்ன்னு ஊருக்கே தெரியும். இதை வெளியில் சொன்னால் மக்கள் எதனால் அடிப்பாங்க தெரியுமா.  உல்லாசமாக இருக்க தாய்லாந்து போயிட்டு வந்துட்டு தாய்நாட்டு மேல விசுவாசமாக இருப்பதுபோல ராகுல், சோனியா கம்பெனி நடிக்குது.  இதெல்லாம் வேஷம்.

தேசிய பிரிவினைவாதத்தை தூண்டியது திமுகதான். பதவியேற்பு விழாவில், இந்திய ஒருமைபாட்டை காப்பேன்னு உறுதி மொழி செய்கிறார்களே. அந்த சட்டம் கொண்டுவர காரணமே திமுகதான். எவ்வளவு வெட்கம்கெட்ட செயல். வரும் டிசம்பர் 31க்கு பிறகு நிரந்தர உரக்கம்தான் என்ற திமுக கருணாநிதி, ஹெச்.ராஜா சர்ச்சைக்குறிய பேச்சுகளை நிறுத்திக்கொள்ளனும் என்கிறார். உண்மையை பேசினால் சர்ச்சைக்குறிய கருத்துக்களா, நேரடியாக விவாதிக்க தயாரான்னு நான் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தும் ஸ்டாலின் வராததன் பின்னணி என்ன?

இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் இந்தியாவின் துக்கநாள் என்றார் பெரியார். அவர் தேச துரோகிதானே, வைத்தியநாத ஐய்யர் கோயில் நுழைவு போராட்டம் நடத்தியபோது அதை விமர்சித்தவர் பெரியார். தலித் பெண்கள் ரவிக்கை அணிவதால் விலைவாசி கூடிப்போச்சுன்னு சொன்ன தலித் துரோகி பெரியார். இதற்கு ஆதாரங்கள் விடுதலையில் இருக்கு என்றவர், தமிழகத்தில் நாத்திகர்கள், ஜிகதிகள்  எல்லோரும் இணைந்து இந்த தேசத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றார்கள். ஆம்பூர் கலவரத்தில் 10 இந்துக்களின் கடைகளை அடித்து  உடைத்திருக்கிறார்கள். அந்த கலவரத்திற்கு காரணமான சமீல் அகமது உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் உடல் ஒப்படைத்தது.  தமிழகத்தில் முஸ்லீம்கள் எங்கு அதிகமாக உள்ளார்களோ அங்கு இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அடுத்து பர்தா அணியக்கூடாதுன்னு நான் சொன்னதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. பள்ளி கல்லூரிகள் பர்தா அணியக்கூடாது. படிக்கும் பிள்ளைகளிடம் பாகுபாடு கூடாது. சில தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாதுன்னு இதை சொன்னேன். அதற்கு சில சம்பவங்கள் இருக்கிறது.

தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன் வாக்காளர் அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்க அறிவித்தபோது இப்படித்தான் குதித்தார்கள். அதற்கு சேஷன், வெளிநாடு போக பாஸ்போர்ட் எடுக்க போட்டா எடுக்கும்போது உங்கள் மத நம்பிக்கை கெடவில்லையா என கேட்டார். அதேபோல் மதுரையில் ஒரு வாக்குச்சாவடியில் பர்தாவுடன் ஓட்டுபோட வந்த பெண்னை, முகத்தை காட்ட சொன்னபோது பிரச்சனையானது. கள்ள ஓட்டு போடுவதை தடுக்க அந்த அதிகாரி அப்படி சொன்னார். ஆனால் தங்களுக்கு சிறப்பு சலுகை கோரினார்கள் முஸ்லீம்கள். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற 5 பேர் கொண்ட குழு வரை சென்றது.

வழக்கில் தீர்ப்பளித்த அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், மதம் உங்களுக்கு பெரியது என்றால் ஓட்டு போட வராதீங்க என்றார். அதைத்தான் நான் சொன்னேன்.  ஆனால் பர்தா அணியக்கூடாது என நான் பேசியதாக இந்த கம்யூனிஸ்டுகள் எல்லா ஊர்லயும் என்னை ஆர்.எஸ்.எஸ்-ஸின் கைகூலின்னு போஸ்டர் ஒட்டுறாங்களாம்,  நான் ஆர்.எஸ்.எஸ் கைகூலியில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸே நான்தான். 1947ல் காந்தியை சுட்டு கொன்றபோது ஆர்.எஸ்.எஸ் தடைவிதிக்கப்பட்டது. அப்போது  தமிழக தலைவர் ஜனாகிருஷ்ண மூர்த்தியும் எனது அப்பாவும் 6 மாதம் மதுரை சிறையில் இருந்தார்கள். 7 வயதில் இந்த இயக்கத்தில் சேர்ந்தேன். தவறாக போஸ்டர் போடாதீர்கள். ஆர்.எஸ்.எஸ் நான்தான்னு போடுங்க” என்றார் காட்டமாக.

Leave a Reply