shadow

சென்னை வரும் பிரதமர் முதல்வரை சந்திப்பது ஏன்?

modi and jayaபாரத பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று சென்னை வரும் நரேந்திரமோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்திப்பார் என கூறப்படுகிறது.

தேசிய கைத்தறி தினம்’ அறிவிப்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, 10.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா மற்றும் முதல்வர் ஜெயலலிதா வரவேற்கவுள்ளதாக கூறப்படுகிறாது.

விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் பிரதமர், விழா நடக்கும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்குக்கு 11 மணிக்கு வருகிறார். விழா முடிந்ததும் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர், தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

டெல்லி திரும்பும் முன் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் பிரதமர் சந்தித்து பேசுவார் என செய்திகள் கூறுகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில் மாநிலங்களவையில் 11 எம்.பிக்களும், மக்களவையிலும் 37 எம்.பி.க்களுடன் பலமாக உள்ள அதிமுகவின் உதவி மத்திய அரசுக்கு  அரசியல் ரீதியாக தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply