shadow

எஸ்.பி.பி-க்காக மட்டும் அல்ல இந்த நோட்டீஸ். இளையராஜா

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரபல பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தான் இசையமைத்த பாடல்களை பொது மேடைகளில் தன்னுடைய அனுமதியின்றி பாடக்கூடாது என்று கூறியுள்ளார்.

இளையராஜாவின் இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பினர் பலவிதமாக விமர்சனம் செய்து வரும் நிலையில் இளையராஜாவின் தரப்பில் அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதீப்குமார் தனது விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்களது கேள்வி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான கேள்வியாக பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமை பணியை தொடர்கிறோம். இது எஸ்.பி.பி-க்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல. உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என கூறுகிறோம்.

கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இது பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால் சிலர் வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply