அஜித் சொன்னதை நம்பி ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ’தலைவர் 168’ படத்தில் நயன்தாராவும் இணைந்துள்ளார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம். ஏற்கனவே இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடத்தி வரும் நிலையில் நயன்தாராவுக்கு இந்த படத்தில் அப்படி என்ன கேரக்டர் என்று அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

இந்த நிலையில் விசுவாசம் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா தயங்கியபோது அஜித் நயன்தாராவிடம் ’இயக்குனர் சிறுத்தை சிவாவை நம்பி தாராளமாக நடிக்கலாம் என்றும் அவர் அனைத்து கேரக்டர்களும் முக்கியத்துவம் கொடுப்பவர் என்று கூறினாராம்

அதை மனதில் வைத்துக் கொண்ட நயன்தாரா ’தலைவர் 168’ படத்திலும் தனக்குரிய முக்கியத்துவம் கிடைக்கும் என நம்பியே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது

 

Leave a Reply