விஜய்யுடன் ஜோடியாக நடிக்க முட்டுக்கட்டை போட்டாரா சூர்யா? ஜோதிகா


இளையதளபதி விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தில் ஜோதிகா ஒரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். போடோசெஷன் முடிந்தபின்னர் படபிடிப்புக்கு செல்லும் தருணத்தில் திடீரென அந்த படத்தில் இருந்து ஜோதிகா விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு படக்குழுவினர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது.

சூர்யா மற்றும் சிவகுமார் குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரிலேயே ஜோதிகா இந்த படத்தில் இருந்து விலகியதாக சமூக வலைத்தளத்தில் வதந்திகள் பரவியது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜோதிகா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

‘விஜய் 61’ படத்தில் இருந்து நான் வெளியேறியதற்கு எனது கணவர் சூர்யாவும், எனது குடும்பத்தினரும் காரணமல்ல. வெளியிலிருந்து வரும் அழுத்தத்திற்காக, யாரும் கடைசி நேரத்தில் படத்திலிருந்து வெளியேற மாட்டார்கள். எனக்கு அந்த படத்தில் சில பிரச்சனைகள் இருந்தது. அவை பின்னர் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. அது என்ன பிரச்சனைகள் என்பது குறித்து இங்கு விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை.” என்று மனம் திறந்து கூறினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *