shadow

jayaசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றவுடன் எதிர்க்கட்சியான திமுகவை விட அதிகமாக விமர்சனம் செய்தது தமிழக பாரதிய ஜனதா கட்சிதான். அதன் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையிலும், அரசியல்ரீதியிலும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி ரஜினியை சந்திக்கவும் முயற்சி செய்தார். ரஜினியை பாஜகவில் இழுக்க அவரது மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை பாஜக மேலிடமும் ரசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா ஜாமீன் பெற்று வெளியே வந்தவுடன் மற்ற தலைவர்களை போல தமிழிசை சவுந்தரராஜனும் அமைதியானார். மேலும் ஒரு திருப்பமாக ரஜினி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்த கடிதம் எழுதிய செய்தி தமிழிசை சவுந்தரராஜனுக்கு, பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

மேலும் தமிழகத்தில் அதிமுகவை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன், அரசியல் செய்ய முயற்சிக்கும் நிலையில் பாஜகவின் அமைச்சர் மேனகா காந்தி,  ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

ரஜினி, மேனகா காந்தி ஆகிய இருவர் எழுதிய கடிதங்களை வெளியிட்டு ஜெயலலிதா அவர்கள் தமிழிசை சவுந்தரராஜனின் வாயை அடைத்துவிட்டதாக அரசியல் களத்தில் பேசி வருகின்றனர்.

பா.ஜ., மேலிடத்தின் நிலைப்பாடா. எது என்று தெரியாமல், தமிழக தலைவர்கள் குழப்பத்தில் உள்ளன்ர. மேனகா காந்தியின் கடிதம், பிரதமர் மோடிக்கு தெரிந்து எழுதப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

Leave a Reply