நெட்டிசன்கள் கேள்வி

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்த வீட்டு உரிமையாளர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத வாடகையை வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு சமீபத்தில் அறிவுறுத்தியது என்பது தெரிந்ததே

ஆனால் அதே நேரத்தில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின் கட்டணங்களை ஆன்லைனில் கட்ட வேண்டும் என்று தமிழக அரசு குறிப்பிட்டிருந்தது

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

வீட்டு வாடகை வசூலிக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுரை கூறும் தமிழக அரசு மின் கட்டணம், சொத்துவரி கட்டணம் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்யலாமே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

Leave a Reply