shadow

ஞானசேகரன் ஐ.ஏ.எஸ் நீக்கம் ஏன்? முதல்வர் விளக்க வேண்டும். கருணாநிதி

karunanidhiதென்மாவட்டத்தில் நடந்த கனிமவள முறைகேடுகள் குறித்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்ததாக சமீபத்தில் ஞானசேகரன் மற்றும் அதுல் ஆனந்த் ஆகியோர் சமீபத்தில் நீக்கப்பட்டதாக வந்த செய்தியினை பார்த்தோம். இந்நிலையில் இந்த இரு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் நீக்கத்திற்கு என்ன காரணம் என்பதை முதல்வர் ஜெயலலிதா விளக்க வேண்டும் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.,

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த கு.ஞானதேசிகன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மின்வாரிய தலைவராக இருந்தபோது வாரியத்துக்கு இழப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டது அதிகார வர்க்கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. சில அதிகாரிகளின் பொறுப்பில் பல துறைகள் இருந்து வருவதாகவும், 18 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பல மாதங்களாக காத்திருப்போர் பட்டியலில் காத்திருப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறு என்ன? அவர்கள் செய்த தவறுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை அரசு வெளிப்படையாக அறிவித்தால் ஒவ்வொருவரும் தன்னிச்சையாக கருத்து கூற வேண்டிய நிலை ஏற்படாது. எனவே, ஐஏஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம் குறித்து மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும்.

ttp://www.chennaitodaynews.com/why-gnanasekaran-suspend-by-tn-govt/

Leave a Reply