shadow

சுஷ்மா ஸ்வராஜ் விவகாரத்தில் திமுக, அதிமுக எம்.பிக்கள் மெளனம் காப்பது ஏன்? ஜி.ராமகிருஷ்ணன்

gramakrishnanமத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் ஊழலில் சிக்கியுள்ள நிலையில் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க் கட்சிகளும் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில் அதிமுக, திமுக எம்பிக்கள் அமைதியாக இருப்பது ஏன்? என மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

” இடதுசாரி கட்சிகள் மக்கள் பிரச்சினைக்காக கூட்டு இயக்கம் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஜவாஹிருல்லா மற்றும் தமிழருவி மணியன் ஆகியோரைச் சந்தித்துள்ளோம்.

 மக்கள் பிரச்சினையில் கூட்டு இயக்கம் என்பதுதான் எங்களது முயற்சி. இதில், திமுக, அதிமுகவை தவிர்த்து, ஊழலை எதிர்ப்பதற்கு யார் எல்லாம் வருகின்றனரோ அவர்களை எல்லாம் கூட்டு இயக்கத்தில் ஏற்று கொள்வோம்.

 மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச முதல்வர்கள் ஊழலில் சிக்கியுள்ள நிலையில் அவர்கள் ராஜினாமா செய்தபின் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி முடக்கி வருகின்றன. ஆனால், நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அதிமுக, திமுக எம்பிக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர். இவர்கள் ஊழலை எதிர்க்க எப்படி முன் வருவார்கள் என்ற கேள்வி எழுகிறது.

ஜூலை 20 ஆம்  தேதி மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சி ஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சி.பி.எம்.எல் உள்ளிட்ட நான்கு கட்சிகள் பங்கேற்றன.  இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி  தலைமையின் அறிவிப்பின்படி, தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்றது”  

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Reply