மாஸ் நடிகரான விஜய் தரம் தாழ்ந்தாரா? திடுக்கிடும் தகவல்
puli vijay
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் கடந்த 1ஆம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று சுமாராக ஓடி வரும் நிலையில் இந்த படத்தின் வசூலை அதிகரித்து, செலவு செய்த பணத்தையாவது திருப்பி எடுக்க படத்தயாரிப்பாளர்கள் அதீத முயற்சி எடுப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை வெளிவந்த விஜய் படங்கள் அனைத்துமே எந்தவிதமான பெரிய விளம்பரங்களும் இல்லாமல் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ‘புலி’ படத்தின் உண்மையான வசூல் சுறாவை விட மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை ஒருசில வார்த்தைகள் புகழ்ந்து பேசுமாறு விஜய் தரப்பில் இருந்தே ஒருசில கோலிவுட் பிரபலங்களை கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி ரஜினிகாந்த் முதல் அனைவரும் புலிக்கு ஆதரவாக கருத்து கூறி வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு பெரிய மாஸ் நடிகர் ஒரு படத்தை ஓட்டுவதற்காக இவ்வாறு தரம் தாழ்ந்து போவது சரியா? என டுவிட்டரில் அஜீத் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *