ஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ விமானம் ஏன்? நிர்மலா சீதாராமன் விளக்கம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் உடல்நலமின்றி இருந்தபோது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலாதேவியின் உத்தரவால் அவருக்கு ராணுவ விமானம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து தற்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அவசர நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்கு ராணுவ விமானம் கொடுக்கப்பட்டதாகவும், தற்போதுகூட ஹிமாச்சலபிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ ராணுவ விமானம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.