shadow

தமிழ்ப் படங்களில் நடிக்க விருப்பமில்லையா? அக்ஷராஹாசன் பதில்

akshara hassanகமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன், சமீபத்தில் அமிதாப், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை அடுத்து அவருக்கு தமிழ், மற்றும் தெலுங்கில் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும், அவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வமில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் தற்போது பாலிவுட் இயக்குனர்களிடம் மட்டும் கதை கேட்டு வருவதாகவும், இந்தியில் நல்ல நடிகை என்ற சாதித்தவுடன் அதன்பின்னர் தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியில் அவர் பிரபல இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசனும் முதலில் ‘லக்’ என்ற இந்திப் படத்தில்தான் அறிமுகமானார். ஆனால் அந்த படம் தோல்வியடைவே அதன்பின்னர் தென்னிந்திய மொழிகளில் விஜய், அஜீத், விஷால், மகேஷ்பாபு, போன்ற முன்னணி நடிகர்களிடம் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது அவருடைய திறமையை பார்த்து இந்தியிலும் வாய்ப்பு குவிகிறது. ஆனால் அக்ஷராஹாசன் முதலிலேயே இந்தியில் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply