shadow

அஜீத் ஓட்டு போட வராததற்கு விஜய் காரணமா? திடுக்கிடும் தகவல்
ajith
நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஜய் காலையில் சீக்கிரமே வந்து ஓட்டுப்போட்ட நிலையில், அஜீத் கடைசி வரை ஓட்டுபோட வரவே இல்லை.

தேர்தலுக்கு முன்பே இரு அணியினர்களையும் சந்திக்க மறுத்த அஜீத், ஓட்டுபோட வருவாரா? என்ற சந்தேகம் இருந்த நிலையில், முந்திய நாள் அதிகாலை வரை ‘வேதாளம்’ படத்தின் டப்பிங்கில் அவர் இருந்ததாகவும், மதியத்திற்கு பின்னர் ஓட்டுபோட அஜீத் வருவார் என்றும் செய்திகள் தெரிவித்தன.

ஆனால் மதியத்திற்கு பின்னர் நடந்த சலசலப்பு காரணமாக அதிருப்தி அடைந்த அஜீத், ஓட்டுப்போட வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அஜீத் குறித்து நாகரீகமற்ற விமர்சனம் செய்து வந்ததால் ஏற்பட்ட அதிருப்தியில் அவர் ஓட்டு போட வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply