shadow

யார் முதலில் ராஜினாமா செய்வது? திமுக, அதிமுக இடையே போட்டி

நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பிரமுகர்களின் அவசர கூட்டம் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஆலோசனை செய்வதற்காக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக எம்.எல்.ஏக்களும், எம்பிக்களும் ராஜினாமா செய்ய முன்வந்தால் அடுத்த வினாடியே திமுக எம்.எல்.ஏக்களும் எம்பிக்களும் ராஜினாமா செய்ய தயார் என்று கூறினார்

ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள அமைச்ஸ்ரீ ராஜேந்திர பாலாஜி, ‘திமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தால், அதிமுக எம்எல்ஏ-க்களும் ராஜினாமா செய்ய தயார் என்று கூறினார். மொத்தத்தில் இருதரப்புக்கும் ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை என்றும், ஒருவர் இன்னொருவரை ராஜினாமா செய்ய சொல்கிறார்களே அன்றி, தாங்கள் ராஜினாமா செய்ய முன்வருவதில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்

மேலும் ராஜினாமா செய்தால் கவர்னர் ஆட்சியோ அல்லது தேர்தலோதான் வரும், காவிரி மேலாண்மை வாரியம் எப்படி வரும் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply