shadow

vasundharaபேராண்மை, வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், போராளி போன்ற பல படங்களில் நடித்துள்ள நடிகை வசுந்தாரா, சமீபத்தில் இணையதளங்களில் பரபரப்பாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்றார். அவருடைய ஆபாச படங்கள் வாட்ஸ் அப் மற்றும் பிற இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை வசுந்தராவின் ஆபாச படங்கள் முதலில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானதாகவும், அதனை தொடர்ந்து பிற இணையதளங்களில் பரவியதாகவும் கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசுந்தரா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலிட் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. போட்டோஷாப் மூலம் மார்பிங் செய்யப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டவருக்கு வசுந்தரா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை முதல் பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் நடிகை வசுந்தரா கடந்த மூன்று ஆண்டுகளாக வாய்ப்புகள் எதுவும் இன்றி இருந்ததாகவும், அதனால் அவர் பெயர் இண்டஸ்ட்ரியில் பரபரப்பாக பேசப்படவேண்டும் என்பதற்காக அவரே தனது ஆபாச புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் நடிகை வசுந்தரா தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை வசுந்தரா கடந்த 2013ஆம் ஆண்டில் சொன்னா புரியாது, சித்திரையில் நிலாச்சோறு ஆகிய படங்களை அடுத்து வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply