சசிகலாவை சிக்க வைத்த இந்த ரூபா யார்?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறையில் சகலவசதிகளுடன் சொகுசாக இருப்பதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த ரூபா யார் என்பதை பார்ப்போம்

கடந்த 2010-ம் ஆண்டு ரூபா கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி மனீஷ் மவுட்கில்லை மணந்தார். இவர் கர்நாடக அரசின் ஊரக குடிநீர் விநியோகத்துறை ஆணையராக பணியாற்றி வருகிறார். கடந்த மாத இறுதியில் கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டிஐஜியாக பொறுப்பேற்ற இவர், பத்தே நாட்களில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். இதனால் சிறை டிஜிபி சத்தியநாராயணராவுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பரப்பன அக்ரஹாரா சிறையில் சோதனை நடத்தியது தொடர்பாக சத்தியநாராயணராவ் ரூபாவுக்கு 2 மெமோ (விளக்கம்) அளித்தார். இருப்பினும் தளராத ரூபா, சத்தியநாராயணராவுக்கு எதிராகவே, ஆதாரங்களைத் திரட்டி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் சாதாரண பெண்ணாக ரூபா வலம் வருவார். சிறுவயதில் கற்றுக்கொண்ட பரத நாட்டியத்தையும், இந்துஸ்தானி இசையையும் அவ்வப்போது அரங்கேற்றுவார். கன்னட முன்னணி தினசரி இதழ்களில் ரூபா கட்டுரை எழுதி வருகிறார். காவல்துறை சீர்திருத்தம், பெண் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, மனிதாபிமானம் தொடர்பாக அவர் எழுதும் கட்டுரைகளுக்கு வரவேற்பு கிடைக்கிறது. தற்போது தனது உயர் அதிகாரிக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கியதால், நாடு முழுவதும் அறியப்படும் ஆளுமையாக ரூபா உயர்ந்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *