shadow

actress voteபாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் பாலிவுட் லைப் என்ற இணையதளம் சமீபத்தில் தென்னிந்தியாவின் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் யார் என்ற வாக்குப்பதிவை நடத்தி அதில் அஜீத் மாபெரும் வெற்றி பெற்றதாக அறிவித்தது.

இந்த போட்டியில் இளையதளபதி விஜய் இரண்டாவது இடத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இதே இணையதளம் தென்னிந்தியாவின் ஹாட் நடிகை யார்? என்ற வாக்குப்பதிவை இண்டர்நெட்டில் நடத்தி வருகிறது.

இந்த போட்டியில்  த்ரிஷா, ஸ்ருதிஹாசன், நயன்தாரா, ஸ்ரேயா சரண், அனுஷ்கா,சமந்தா, தமன்னா. அனைவரும் தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகைகளாக இருந்து வருவதால் தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இருந்து அதிகளவிலான வாக்குகள் பதிவாகிக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வாக்குகள் விறுவிறுப்பாக பதிவாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய நிலவரப்படி ஸ்ரேயா 61.36% பெற்று முதலிடத்தில் உள்ளார். ஸ்ருதிஹாசன் இரண்டாவது இடத்தில் இருந்தபோதிலும், அவருக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் சதவீதம் வெறும் 11.52% என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவுக்கு 8.07%மும், நயன் தாராவுக்கு 7.2%மும் தமன்னாவுக்கு 6.01%மும், த்ரிஷாவுக்கு 3.14%மும், சமந்தாவுக்கு 2.7%மும் கிடைத்துள்ளது.

Leave a Reply