shadow

இலங்கை தேர்தல். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அடுத்த பிரதமர் யார்?

srilankaஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நேற்று நடைபெற்று முடிந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக பொதுமக்கள் அச்சமின்றி தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து அதிக சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் யார் இலங்கையின் அடுத்த பிரதமர் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே மற்றும் ரணில் விக்ரமசிங்கே இடையே கடும் போட்டி நடைபெற்று வருவதாகவும், ஆனால் அதேநேரத்தில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றிப் பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. நேற்று மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்ததை அடுத்து மாலை 6 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது. அதை தொடர்ந்து வாக்கு பெட்டிகளில் இருந்த வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 44.1 சதவீத வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது பெற்று கிட்டத்தட்ட இரு கட்சிகளும் சம நிலையை அடைந்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பு 5.4 சதகிகித வாக்குகள் பெற்றுள்ளது. மேலும், காலே, ரத்னபுரி, மாத்தறை, ஹம்பன்தோட்டா ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

மாத்தளை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி முன்னிலையில் உள்ளது. வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிக வாக்குகளை பெற்றுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. இரு பெரும் கட்சிகளும் கிட்டத்தட்ட சம அளவு வாக்குசதவீதத்தை பெற்றுள்ளதால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற இரு கட்சிகளும் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply