shadow

அடுத்த பிசிசிஐ தலைவர் யார்? சீனிவாசன் – சரத்பவார் போட்டி?
bcci
இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் ஜக்மோகன் டால்மியா கடந்த ஞாயிறு அன்று காலமானதை அடுத்து பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவர் பதவியை பிடிக்க பலத்த போட்டி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரிமியர் கிரிக்கெட் தலைவர் ராஜிவ் சுக்லா, கவுதம் ராய், செயலர் அனுராக் தாகூர் ஆகியோர் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. அதுமட்டுமின்றி சரத்பவாரும் தற்போது புதிதாக களத்தில் குதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலிலே சரத்பவார் தலைவர் பதவிக்கு போட்டியிட முயன்றார். ஆனால் எதிர் தரப்பை சேர்ந்த ஐ.சி.சி., தலைவர் சீனிவாசன் ஆதரவு டால்மியாவுக்கு இருந்ததால் அவர் போட்டியிடவில்லை. இந்நிலையில் தற்போது ஜக்மோகன் டால்மியா மரணம் அடைந்ததை அடுத்து மிண்டும் தலைவராக சரத்பவார்  முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. பிசிசிஐ தலைவராக மொத்தமுள்ள 30 உறுப்பினர்களில் 16 பேர் ஆதரவு தேவை. இந்த ஆதரவு சரத்பவாருக்கு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியே

மேலும் கோர்ட் உத்தரவின் பேரில் பதவி விலகிய ஐ.சி.சி., தலைவர் சீனிவாசனும், தனது 10 ஆதரவாளர்களுடன் களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் உச்சநீதிமன்றம் இவர் போட்டியிடுவதை அனுமதிக்குமா? என்று தெரியவில்லை.

இதனிடையே, கிழக்கு மண்டலத்தை தேர்ந்த ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் அமிதாப் சவுத்ரி அவர்களும் தலைவர் பதவிக்கு குறி வைத்துள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், பி.சி.சி.ஐ., துணைத் தலைவராகவும் உள்ளார். இவருக்கு கிழக்கு மண்டலத்தின் ஆதரவு உள்ளது.

Leave a Reply