shadow

ரஜினி, அஜித்தை அடுத்து வெள்ளை தாடியில் யார் அழகு? ராதாரவி

5பிரபல நடிகர் ராதாரவி மேடையில் பேசும்போது சிலசமயம் உணர்ச்சிவசப்பட்டும், சிலசமயம் கலகலப்பாகவும் பேசும் தன்மை உடையவர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ராதாரவின் தங்கை நிரோஷாவின் கணவரும் பிரபல நடிகருமான ராம்கி நடித்த ‘ஆங்கிலப்படம்’ இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ராதாரவி வெள்ளை தாடியுடன் ரஜினி, அஜித்தை அடுத்து அழகாக இருப்பது யார்? என்பது குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.

அவர் கூறியபோது, ‘எனக்கு தெரிந்து வெள்ளை தாடி வைத்து இளமையாகவும் அழகாகவும் இருப்பது ரஜினி சார்தான். சூப்பர் ஸ்டார் என்ற இமேஜே இல்லாமல் வெள்ளை தாடியில் அவர் தோன்றுவார். ஆனாலும் பார்க்க அழகாக இருப்பார். அதேபோல் ரஜினியை அடுத்து சால்ட் அண்ட் பெப்பர் என்று கூறப்படும் வெள்ளைதாடியில் இளமையாக இருப்பவர் அஜித் தான்.

இவர்கள் இருவரை தவிர இப்போது மூன்றாவதாக வெள்ளைத்தாடியில் அழகாக என் மாப்ளே ராம்கிதான் என்று கூறியுள்ளார்.

Leave a Reply