50 கோடி பாஸ்வேர்டுகளை திருடியது யார்? யாஹூ அதிர்ச்சி தகவல்

yahooஒருகாலத்தில் தேடுபொறு தளங்களில் நம்பர் ஒன் ஆக இருந்த யாஹூ, கூகுள் தேடுபொறு வந்த பின்னர் அதன் போட்டியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

இதன்பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு ’ஹேக்கர்’ எனப்படும் இணையதள ஊடுருவலாளர்களால் யாஹூ’வை பயன்படுத்திவந்த சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்டு மற்றும் இதர முக்கிய ரகசியங்கள் திருடப்பட்டது. இதனால் உடனடியாக யாஹூ பயனாளர்கள் பாஸ்வேர்டை மாற்றுமாறு யாஹூ அறிவுறுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து யாஹூ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

ஆன்லைன் தொழில்நுட்பத்துறையில் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் ஊடுருவல் மற்றும் தகவல் திருட்டுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இதன் அடிப்படையில், யாஹூ போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளிகளின் கணக்குகளை வெளிநாடுகளை சேர்ந்த சில சக்திகள் குறிவைப்பது தெரியவந்தால், அதுதொடர்பாக உடனுக்குடன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் புதிய புரோக்ராம்களை உருவாக்கியுள்ளன.

தங்களது ஆன்லைன் கணக்கு தொடர்பான விபரங்கள் பிறரால் நோட்டம் பார்க்கப்படுவதாகவோ, களவாடப்பட வாய்ப்புள்ளதாகவோ கருதும் நபர்கள் உடனடியாக தங்களது கடவுச்சொல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கேள்வி-பதில்களை (security question information) மாற்றிக் கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *