shadow

3 மாணவிகள் பலியான கல்லூரிக்கு அனுமதி கொடுத்தது அன்புமணியா? திடுக்கிடும் தகவல்
anbumani
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட எஸ்.வி.எஸ். ஹோமியோபதி மருத்துவகக்ல்லூரிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ், சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்தான் அனுமதி கொடுத்தாரா? அல்லது அவரது இணையமைச்சர் பனபகாலட்சுமி அனுமதி கொடுத்தாரா என்பது குறித்த சர்ச்சைகள் தற்போது எழுந்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய மூன்று மாணவிகளின் உயிர்களை காவு வாங்கிய இந்த கல்லூரிக்கு, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்அன்புமணியும்,  இணை அமைச்சராக இருந்தஆந்திராவை சேர்ந்த பனபகாலட்சுமியும், மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் முறையாக ஆய்வு செய்யாமல் அனுமதி கொடுத்ததாகவும் இதன் காரணமாகவே தற்போது மூன்று உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

ஆனால் இந்த கருத்தை முன்னாள் அமைச்சர் அன்புமணி மறுத்துள்ளார். இதுகுறித்து அன்புமணி கூறியபோது, “மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்த போது, இணை அமைச்சராக ஆந்திராவை சேர்ந்த பனபகாலட்சுமி இருந்தார். அவருக்கு கீழ்தான், ஆயூஸ் எனப்படும் ஹோமியோபதி மருத்துவமனைக்கான அனுமதி வழங்கும் பிரிவு இருந்தது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply