shadow

swamyஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை கடந்த 20 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தன்னையும் மூன்றாம் தரப்பாக சேர்க்க கோரி இன்று சுப்பிரமணியன் சுவாமி ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி குமாரசாமி,  சுப்பிரமணியன் சுவாமியிடம், “நீங்கள் யார்?” என்று  கேள்வி எழுப்பினார். இதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன்சுவாமி, 2ஜி மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் தான் ஆஜராகி வாதாடி வருகிறேன் என்றும், வழக்கின் உண்மையை நிலைநாட்ட தன்னை மூன்றாம் தரப்பாக சேர்க்க வேண்டும் என்று கூறினார். சுப்பிரமணியன் சுவாமியை முன்றாவது தரப்பாக சேர்க்க ஜெயலலிதாவின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,

சுப்பிரமணிய சுவாமியின் விளக்கத்தை அடுத்து இந்த மனு மீது நாளை தீர்ப்பளிப்பதாக நீதிபதி குமாரசாமி அறிவித்தார்.

Leave a Reply