shadow

பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இன்னும் சிலர்: ராகுல்காந்திக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் துணை முதல்வர்

எதிர்க்கட்சிகளின் பிரதமர் பட்டியலில் ராகுல்காந்தி மட்டும் இல்லை என்றும், அவருடன் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் யாதவ், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு மற்றும் பகுஜன் சமாஜுன் மாயாவதி போன்றவர்களும் பிரதமருக்கான போட்டியில் உள்ளதாக பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், லாலு பிரசாத யாதவ்வின் மகனுமான தேஜஸ்வீ யாதவ் கருத்து கூறி உள்ளார். இது காங்கிரஸ் கட்சியினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக பேசி முடிவு எடுக்கும் பிரதமர் வேட்பாளர் யாராக இருந்தாலும், அவர் ராகுல் என்றாலும் தமது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி அவரை ஆதரிக்கும் என்று கூறிய தேஜஸ்வீ, பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் அனைவரையும் ராகுல் காந்தி ஒன்றிணைத்து மெகா கூட்டணி அமைக்க வேண்டும் எனவும்வலியுறுத்தி உள்ளார்.

தேஜஸ்வியின் இந்த கருத்து கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply