shadow

‘டங்கல்’ தமிழ் ரீமேக்கில் நடிக்க போவது யார்?

அமீர்கான் நடித்த ‘டங்கல்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அந்த படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம் என்ற வகையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஒருசில தயாரிப்பாளர்கள் முயன்று வருகின்றனர்.

ஏற்கனவே அமீர்கானின் ‘3 இடியட்ஸ்’ திரைப்படம் தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியது போல இந்த படத்தின் ரீமேக்கில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அமீர்கானின் கேரக்டருக்கு பலரும் கொடுத்த சாய்ஸ் கமல்ஹாசன் தான். ஆனால் அவர் தற்போது ‘சபாஷ்நாயுடு’, ‘விஸ்வரூபம் 2’, ‘மருதநாயகம்’ என அடுத்தடுத்து பிசியாக இருப்பதால் தற்போது அனைவரின் பார்வையும் அஜித் பக்கம் திரும்பியுள்ளதாம்

அஜித் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் என்பதால் அவர் நடித்தால் கண்டிப்பாக இந்த படம் சூப்பர் சக்ஸஸ் ஆகும் என்று பலர்டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply