shadow

30 பெரியதா? 1247 பெரியதா? நீட் தேர்வின் சர்ச்சைகள்

நீட் தேர்வினால் அரசு பள்ளியில் படிக்க்கும் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதமே பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் வைக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் சராசரியாக 30 முதல் 35 அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைத்துள்ளது. ஆனால் இந்த வருடம் வெறும் 5 மாணவர்கள் மட்டுமே அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைத்துள்ளது., இதனை கருத்தில் கொண்டு கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல்வாதிகளும் பெரும்பாலான ஊடகங்களும் கூறுகின்றனர்.

ஆனால் நீட் விஷயத்தில் நடந்த நல்ல விஷயம் என்னவெனில் இதுவரை நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் பிளஸ் 1 பாடத்தை படிக்காமல் பிளஸ் 2 பாடத்தை மட்டும் இரண்டு வருடங்கள் மனப்பாடம் செய்து அதிகளவில் மெடிக்கல் சீட் பெற்றுள்ளனர். கடந்த வருடம் இந்த மூன்று மாவட்டங்களில் இருந்து 1520 மாணவர்கள் மெடிக்கல் சேர்ந்துள்ளனர்.

ஆனால் இந்த வருடம் இந்த மூன்று மாவட்டங்களில் இருந்து வெறும் 273 மட்டுமே மெடிக்கல் சேர்ந்துள்ளனர். மீதியுள்ள 1247 இடங்கள் மற்ற மாவட்ட மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. எனவே 30 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சீட் கிடைக்காதது பெரியதா? 1247 மாணவர்களுக்கு சீட் கிடைத்தது பெரியதா? என்பதை அனைவரும் எண்ணி பார்க்க வேண்டும்

Leave a Reply