காற்றில் பறக்கவிடப்பட்டன கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கடந்த அறுபது நாட்களுக்குப் பின்னர் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் தற்போது இயங்கி வருகின்றன என்பது தெரிந்ததே

ஆனால் பேருந்துகள் இயங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பயணிகள் மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், ஒரு பேருந்தில் 30 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன

ஆனால் நெல்லையில் ஓடும் பேருந்துகள் பெரும்பாலும் 60 முதல் 80 பயணிகள் பயணம் செய்வதாகவும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் அளவுக்கு பயணிகள் அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

அப்படி என்றால் அரசு விதித்த கட்டுப்பாடு என்ன ஆச்சு என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது

Leave a Reply