பிரதமர் மோடியின் மனைவி எங்கே? தேடிய அமெரிக்க அதிகாரிகள்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் சரித்திர சாதனைமிக்க அமெரிக்க பயணம் முடிவடைந்து இன்று அவர் நெதர்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் காரில் இருந்து மோடி இறங்கியபோது எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது மனைவியுடன் தான் செல்வது வழக்கம். அதேபோல் மோடியின் மனைவியும் வந்திருப்பார் என கருதி காரின் பின்பக்கத்தில் இருந்த கதவை அதிகாரிகள் திறந்தனர். ஆனால் உள்ளே கார் காலியாக இருந்ததை பார்த்து அந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மோடி சிறுவயதிலேயே மனைவியை பிரிந்து பிரம்மாச்சாரியாக வாழ்வது இந்தியர் பலருக்கே தெரியாத நிலையில் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வெகுவேகமாக பரவி வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *