ஜெயலலிதாவிற்கு பணிவிடை செய்த பெண் எங்கே ? : ஓபிஎஸ் ஆலோசனை

முன்னாள் முதல்வர் மரணம் குறித்து கடந்த சில நாட்களாக சந்தேகம் கிளப்பி வரும் ஓபிஎஸ் அணிகள் தினந்தோறும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் சசிகலா தரப்பு திணறி வரும் நிலையில் தற்போது ஜெயலலிதாவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது அவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு தெரியும் என்றும் அவரை கண்டுபிடித்தால் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர்ந்து விடலாம் என்றும் ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் அணியினர் நேற்று அவரது இல்லத்தில் இரவு முழுக்க முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து பேசப்பட்டாதாகவும், ஜெயலலிதா மாடியில் இருந்து தள்ளப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதனை ஜெயலலிதாவிற்கு பணிவடை செய்த பணிப்பெண் பார்த்தாகவும் தகவல்கள் ஓபிஎஸ் அணியினர்களுக்கு தகவல் வந்துள்ளதாம்.

எனவே ஜெயலலிதாவிற்கு பணிவிடை செய்த பெண் எங்கே சென்றிருப்பார் .அந்த பணிப்பெண்ணை பேச வைத்தால் ஜெயலலிதா மரண்ம் குறித்த உண்மை புலப்படலாம்” என்று ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் விவாதித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *