மறுதிருமணம் எப்போது? அமலாபாலை விவாகரத்து செய்த விஜய் விளக்கம்

பிரபல நடிகை அமலாபாலை சமீபத்தில் விவாகரத்து செய்த இயக்குனர் விஜய் விரைவில் மறுதிருமணம் செய்யவுள்ளதாக ஒருசில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தது. பெற்றோர் பார்க்கும் பெண் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாகவும், விரைவில் விஜய்யின் மறுதிருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் விஜய் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிதுள்ளார். இப்போதைக்கு தனது கவனம் நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும் என்று இருப்பதாகவும், இதுபோன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றது. இது போன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேலும் வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு ஆற்றி வரும் ஊடக நண்பர்களிடம், இது போன்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற தார்மீக உரிமை எனக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய கடமை. அதை முழு மனதோடு நிறைவேற்றுவேன்’ என்று கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *