shadow

அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. வரும் ஆகஸ்ட் முதல் ஆறாம் தேதி முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் செப்டம்பர் முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன

இந்த நிலையில் இது குறித்து பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ’தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தகுந்த நேரத்தில் இது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் 12764 மையங்களில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளதாகவும் அவர் கூறினார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *