shadow

‘தெறி’ படத்தின் தெறிக்க வைக்கும் ஆடியோ ரிலீஸ் எப்போது? புதிய தகவல்
theri2
‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் கம்போஸ் செய்யும் பணியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது இந்த படத்தின் பாடல்களை முற்றிலும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் இந்த படத்தின் தீம் மியூசிக் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தீம் மியூசிக் பணிகள் முடிந்தவுடன் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்தின் இசையும் ‘தெறியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார்,இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

Chennai Today News: When Theri audio release?

Leave a Reply