கூகுள் CEO சுந்தர் பிச்சையிடம் ஆசையை தெரிவித்த ஷாருக்கான்

sharukசென்னையில் பிறந்த தமிழரான சுந்தர் பிச்சைக்கு தமிழக தலைவர்கள் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு வரும் நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் சுந்தர் பிச்சை கடந்த சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து கொண்ட சில கருத்துக்களை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்றது. இதில் ஷாருக்கானுடன் கூகுளின் தற்போதைய சி.இ.ஓ. சுந்தர் பிச்சையும் கலந்து கொண்டார். இந்த அரை மணிநேர அரட்டை நிகழ்ச்சியை கூகுள்ப்ளெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், சுந்தர் பிச்சை ஷாருக்கானிடம் ‘நீங்கள் உங்கள் தொழிலை மாற்றிக் கொள்ள விரும்பினால், என்ன செய்ய விரும்புகிறீர்கள்?’ எனக் கேட்டார்.

அதற்கு ஷாருக்கான், என்ஜினியர் ஆக இருந்த எனது தாத்தா, பாட்டியைப் பார்த்தே வளர்ந்ததால் நானும், அவர்களைப் போலவே என்ஜினியராகவே விரும்புவேன் என பதில் அளித்திருந்தார்.

‘பார்க்க முட்டாள் போல தோன்றினாலும், நான் புத்திசாலி. பள்ளிப் பருவத்தில் மின்னணுவியல்(electronics) பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தொழிற்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி-யிலும் பயில எண்ணி நுழைவுத் தேர்வும் எழுதியிருந்தேன்’ என இந்நிகழ்ச்சியின்போது ஷாருக்கான் குறிப்பிட்டார்.

தற்போது, புதிய கூகுள் சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த செய்தி மீண்டும் ஊடகங்களில் வலம்வர தொடங்கியுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *