shadow

ilaiyarajaபாலா இயக்கி வரும் ‘தாரை தப்பட்டை’ படம்தான் இளையராஜா இசையமைத்த 1000வது படம் என்றிருந்த நிலையில் இந்த பெருமையை அமிதாப், தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப்’ படம் தட்டிப்பறித்துவிட்டது.

நேற்று வெளியான ‘ஷமிதாப்’ படத்தின் ஆடியோ விழாவில் இளையராஜாவுக்கு ஒரு மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது.

மும்பையில் நடந்த இந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டு ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த படத்தில் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷ்ராஹாசான் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கியுள்ள இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் தனுஷ் நடிகராகவும், அவருக்கு பின்னணி குரல் கொடுக்கும் கலைஞராக அமிதாப்பும் நடித்துள்ளனர்.

Leave a Reply