shadow

modi and tony abootஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பாரத பிரதமர் மோடியை ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபாட் கட்டித் தழுவி வரவேற்றார்.

தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின்  வளர்ந்த  20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாடு   ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க  பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

இந்த ஜி-20 மாநாட்டை நடத்தும் ஆஸ்திரேலியா, மாநாட்டு அரங்கத்துக்குள் நுழைந்த ஒவ்வொரு நாட்டின் தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகிறது. பல நாடுகளின் தலைவர்களை ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட்டுடன் கை குலுக்கிவிட்டு, அவருடன் நின்று புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்துவிட்டு, தங்களது இருக்கைக்கு அமரச் சென்றனர்.

அவ்வரிசையில், மாநாட்டு அரங்கத்துக்குள் நுழைந்த இந்தியப் பிரதமரான நரேந்திர மோடியும், டோனி அபாட்டுடன் கை குலுக்க வலது கரத்தை நீட்டினார்.

மோடியின் கரத்தைப்பற்றிய டோனி அபாட், அவரை அருகே அழைத்து, மார்போடு சேர்த்து ஆரத்தழுவி வரவேற்றார். வேறு எந்த நாட்டின் தலைவர்களும் அளிக்காத உள்ளப்பூர்வமான வரவேற்பு மோடிக்கு அளிக்கப்பட்டதைக் கண்ட புகைப்படக் கலைஞர்கள், இந்த அபூர்வக் காட்சியை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

Leave a Reply