shadow

இம்ரான்கான் பிரதமர் பதவியேற்பது எப்போது?

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்ற இம்ரான்கான், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் விரைவில் ஆட்சி அமைக்கவுள்ளார். அவர் பிரதமர் பதவியை ஏற்பது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்படம் வரும் ஆகஸ்ட் 14 -ம் தேதி வரவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக பிரதமராக இம்ரான் பதவி ஏற்பார் என்று தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் செய்தி தொடர்பாளர் நேமுல் ஹவக் சற்றுமுன் செய்தியாளர்களிடம் கூறியபோது, “நாங்கள் தொடர்ந்து சுயேட்சை எம்பிக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் விரைவில் எங்களுடன் இணைவார்கள்” என்றார்.

Leave a Reply