shadow

srirangamஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால், சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தே.மு.தி.க., பா.ஜ.க. தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வருகின்ற 15 ஆம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கின்றது. இது தொடர்பாக அனைத்து கட்சிகளின் கருத்துக்களை கேட்க, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில், வேட்பாளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தன. தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து தி.மு.க. கேள்வி எழுப்பியபோது, தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து எவ்வித தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று பிரவீன் குமார் கூறினார்.

மேலும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு, இறுதிப்பட்டியல் வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்றார். அப்போது, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தே.மு.தி.க. மற்றும் பா.ஜ.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Leave a Reply