‘கழுகு 2’ படத்தின் கதை என்ன?

கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான படம் கழுகு. காதல் கலந்த காமெடி படமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

கழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

கழுகு படத்தின் முதல் பாகத்தில் கிருஷ்ணா மற்றும் பிந்துமாதவி இறந்துவிடும் வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் மீண்டும் அதே ஜோடி நடிக்கின்றார்கள் என்றால் இருவரும் பேயாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கோலிவுட்டின் த்ரில்லிங் பேய்ப்படங்களில் ஒன்றாக இந்த படம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *