அஜீத்-ஷாலினி தம்பதிக்கு கடந்த 2ஆம் தேதி ஆண்குழந்தை பிறந்தது என்பதை அனைவரும் அறிவோம். தாயும் சேயும் நலமாக இருக்கும் நிலையில் அடுத்தகட்டமாக குட்டித்தல’க்கு பெயர் சூட்டும் விழாவை விரைவில் நடத்த அஜீத் தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.
முதல் குழந்தைக்கு அனோஷ்கா என்ற பெயர் வைத்த நிலையில் இரண்டாவது குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என அஜீத் தீவிர யோசனையில் உள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. குட்டித்தல’யின் ஜாதகப்படி ‘வெற்றி’ என்ற பொருள் கொண்ட பெயர் வைத்தால் யோகமாக இருக்கும் என ஜோசியர் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
பூசம் நட்சத்திரம் கடக ராசி, மகர லக்னம் உள்ள குட்டித்தலை’யின் பெயரை தெரிந்து கொள்ள அஜீத் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஆவலுடன் உள்ளனர். வெற்றி என்ற பொருள் கொள்ளும்படி பெயர் வைக்க வேண்டும் என ஜோசியர் கூறியுள்ளதை வைத்து குட்டித்தல’க்கு ‘விஜய்’ என்ற பெயரை வைக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து கூறிவருகின்றனர். பெயர் விஷயத்தில் அஜீத் என்ன முடிவு செய்யவுள்ளார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
Leave a Reply
You must be logged in to post a comment.