shadow

இக்கட்டான நிலையிலும் ‘கிங்’ விஜயகாந்த் வீட்டுக்குள் முடங்கி கிடப்பது ஏன்? திடுக்கிடும் தகவல்
vijayakant
மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று விஜயகாந்தை எப்போது அறிவித்தார்களோ அதற்கு மறுநாளில் இருந்தே விஜயகாந்த் தலையே காட்டவில்லை. உடல்நிலை காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதாகவும், தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நேற்று அதிரடியாக பிரஸ் மீட் நடத்தியும் அதுகுறித்து எந்தவித விளக்கமும் விஜயகாந்திடம் இருந்து நேரடியாக வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரச்சாரங்களுக்கும் முழுக்க முழுக்க பிரேமலதாவே சென்று வருகிறார். முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பு செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்றால் மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என்று இப்போது மக்கள் நலக்கூட்டணி தலைவர்களே கவலை அடைந்து உள்ளனர்.

விஜயகாந்தின் உடல்நலம் குறித்து தேமுதிக நிர்வாகி ஒருவர் கூறியபோது, ‘கடந்த எட்டு மாதங்களாக கேப்டன் உடல் அளவில் தளர்ந்துவிட்டார். மற்றவர்கள் துணையில்லாமல் நடப்பது சிரமம். ஜெயலலிதாவைப் போல எட்டு வைத்துத்தான் நடக்கிறார். முப்பது ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகனாக இருந்தவர். 2011-ம் ஆண்டிலேயே மது அருந்துவதை முழுமையாக நிறுத்திவிட்டார் கேப்டன். ஆனால், உடல் அளவில் அதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. சிங்கப்பூரில் ரஜினிக்கு சிகிச்சை நடந்த அதே மருத்துவமனையில்தான் கேப்டனுக்கும் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சிகிச்சை கிட்னி தொடர்பானது.

அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தாக்கம் இப்போது வரையில் தொடர்கிறது. ஆரம்பகாலங்களில் மேடையில் பேசும்போதுகூட கோர்வையாக பேசியது கிடையாது. இப்போது வார்த்தைகளில் தடுமாற்றம் வருவதற்குக் காரணம், சிகிச்சையில் ஏற்பட்ட மாற்றம்தான். தவிர, கடந்த சில வாரங்களாக தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் சிரமப்படுகிறார். கூடவே, சைனஸ் தொல்லை வேறு. அதனால்தான் சரிவர பேச முடியாமல் தவிக்கிறார். முழு ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்திவிட்டதால், கட்சி கூட்டங்களில் பிரேமலதா பேசி வருகிறார். இது முன்கூட்டியே மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களிடம் பேசி வைத்துக் கொண்ட ஏற்பாடுதான். இப்போது கேப்டன் ஓரளவுக்கு தேறி வருகிறார்.

வருகிற 10-ம் தேதி மாமண்டூர், ஆண்டாள் அழகர் கல்லூரியில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கேப்டன் பேச இருக்கிறார். பழைய கேப்டனை அங்கே பார்க்க முடியும் என நாங்கள் நம்பவில்லை. அவர் முழுதாக தளர்ந்துவிட்டார் என்பதுதான் உண்மை’ என்று கூறினார்.

Leave a Reply