shadow

காலா படத்திற்கு பின் என்ன நடக்கும்? ரஜினிகாந்த் பேச்சு

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 5வது நாளாக ரசிகர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:

1960ஆம் ஆண்டுகளில் மெட்ராஸ் பற்றி கர்நாடகாவில் பெருமையாக பேசுவார்கள். நானும் மெட்ராஸில் கடந்த 40 வருடங்களாக இருந்து வருகிறேன். எனவே நான் மெட்ராஸ்காரன் தான்

என் உடல் ஆரோக்கியத்திற்கு தியானமே காரணம், ரசிகர்கள் அனைவரும் தியானம் செய்யுங்கள். நான் உடல்நலமின்றி இருந்தபோது ரசிகர்களின் பிரார்த்தனையே நான் மீண்டும் நலமுடன் திரும்ப காரணம்.

கனவு காணும் போது இருக்கும் மகிழ்ச்சி நனவாகும் போது இருக்காது. கனவு காண வேண்டாம் என்று கூறவில்லை, நேர்மையான வழியில் கனவுகளை நிறைவேற்ற வேண்டும்

தமிழ் கற்றுக்கொள் உன்னை பெரிய ஆளாக மாற்றுகிறேன் என இயக்குனர் பாலச்சந்தர் கூறினார். அவர் என்னை நடிகனாக்கியது மட்டுமின்றி என்னை தனது மகன் போலவே பார்த்து கொண்டார்.

காலா படத்தில் வித்தியாசமான ரஜினியை காண்பித்துள்ளார் இயக்குனர் ரஞ்சித். இந்த படத்திற்கு பின் என்னவென்று ஆண்டவனுக்கு தான் தெரியும்

முதலில் குடும்பமே முக்கியம், குடும்பம், உறவினர்களிடம் நல்ல மதிப்பை பெற வேண்டும்

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Leave a Reply