shadow

செல்போன் அதிகமாக பேசினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்: ஒரு அதிர்ச்சி தகவல்

உலகில் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாதவர்களே இல்லை எனலாம். முதலில் அவசியத்திற்கு பயன்பட்ட செல்போன் தற்போது ஆடம்பரத்திற்கும், அவசியமற்றதற்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் செல்போனில் அதிக நேரம் பேசினால் ஏற்படும் விளைவுகள் குறித்து தற்போது பார்ப்போம்

*செல்போன் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கதிர்வீச்சு பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

* அந்த அறிக்கையில், செல்போன் சிக்னலில் இருந்து 24 மணி நேரமும் வெளியாகும் கதிர்வீச்சுகள் மனிதர்களை மிகவும் பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஒருவர் 20 முதல் 30 நிமிட நேரம் தொடர்ந்து செல்போன்களை பயன்படுத்தினால் அவருக்கு 10 ஆண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

* செல்போனை அருகில் வைத்து தூங்குவதாலும், வாகனங்களில் போகும்போது பயன்படுத்துவதாலும் கதிர்வீச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது எனவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஆய்வில் வெளியாகி உள்ளன.

Leave a Reply